Translate

Tuesday, 26 March 2013

தேய்ந்த நிலா

தேய்ந்த நிலா…
------------------
நீயாக நானிருப்பதை
உணர்கிறாயா…?
உறுத்தல் ஒன்று
உன்னையும் நெருடுகிறதே
உணரவில்லையா..?
எப்போதும் உன்னையே
முன் வைத்து தடம்பதிப்பதால்…
செல்லும் இடம் மறந்து
உற்றார்களின் சொல்லுக்கு
வசையாகிறேன் நான்…
உன்னுடன் உடன்படிக்கை
இல்லாமல் உலாவுவது
எனக்கு ஓர் நம்பிக்கை
வாழ்க்கை பத்திரம் என்று…
உன் வீட்டில் கொடுத்தார்கள்
கல்யாண பத்திரிகை..
நானிருக்கும் இடத்தில்
வேறொருத்தி..!!
உறுத்தல் ஒன்று
உன்னையும் நெருடுகிறதா…?
இப்போது,
உன் கருவை சுமக்கும்
காரிகை நானென்று…!
தறுதலை தகப்பனாய்
நீயென்று…
உணர்வாயா…
இப்போது…!?

No comments:

Post a Comment