Translate

Saturday, 31 August 2013

"முரட்டு' மூலிகைகள்

"முரட்டு' மூலிகைகள்

வெயில் காலத்தில், கிராமப்புறங்களில் மோர் விற்பனை பரவலாக நடைபெறும். "வேரில்லாக் கொன்றான்' என்ற மூலிகையை, மோர் விற்பனையில் கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவர். இந்த வேரில்லாக் கொன்றான் செடியின் ஒரு சொட்டு சாறு, தண்ணீரைக் கூடக் கெட்டிப்படுத்தி விடும். மோர் விற்பனை செய்யும் பெண்கள், தண்ணீரை மோரில் ஊற்றி கெட்டியாவதற்கு இந்தச் செடியின் சாற்றைப் பயன்படுத்துவர். கருடக்கொடி என ஒரு மூலிகைச் செடி உள்ளது. இந்த மூலிகை செடியின் வேரை எவ்வளவு பெரிய இரும்பின் அருகில் கொண்டு சென்றாலும், இரும்பு தெறித்து விடும். கொள்ளைக்காரர்கள் இரும்பு பூட்டை உடைக்க, இந்த மூலிகை வேரைப் பயன்படுத்துவர்.

தகவல் சுரங்கம்
தெலுங்கானா எக்ஸ்பிரஸ்
தெலுங்கானா மாநிலம் வருவதற்கு முன், இந்திய ரயில்வே தெலுங்கானா எக்ஸ்பிரசை இயக்குகிறது. இந்த ரயில், தெலுங்கானா பகுதியான செகந்திரா பாத்திற்கும், சிர்பூர் காகஜ் நகருக்கும் இடையே ஓடுகிறது. இந்த ரயில் காசிபெட், ராமகுண்டம் வழியாக செல்கிறது. வாரங்கல் மாவட்டத்தில் காசிபெட் உள்ளது. தெலுங்கானாவில் வாரங்கல் ஒரு மாவட்டம். சிர்பூர் காகஜ் நகர் என்பது தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ளது. காகஜ் என்றால், காகிதம் என்று அர்த்தம். இங்கு தான் காகித உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. தெலுங்கானா மாநில பகுதிகளில் ஓடுவதால் இந்த ரயிலுக்கு தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கு முன்பே, தெலுங்கானா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டது.

No comments:

Post a Comment