Translate

Sunday, 1 September 2013

அழகாகனுமா டென்ஷனை குறைக்கலாமே

அழகாகனுமா டென்ஷனை குறைக்கலாமே

சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல எப்போதும் ப்ரெஷ் ஆக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த மூஞ்சுடன் இருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணமல் போய்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களை காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும் அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது.
இந்த மனதை இயற்கையாக அதாவது டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும். என்று தெரிவித்தனர். என்ன நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்பவே உங்களை டென்ஷனை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடும்.

No comments:

Post a Comment