நிசான் அறிமுகப்படுத்தும் புதிய அழகான அடக்கமான எஸ்.யு.வி. - டெரேனோ
நிசான் மோட்டார்ஸ், ஆக., 20ம் தேதி, மும்பையில், புதிய அடக்கமான எஸ்.யு.வி. டெரேனோவை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து, ஒரகடம் உற்பத்தி சாலையில் மைக்ரா, சன்னி, இவாலியாவை தொடர்ந்து தயாரிக்கப்படுகிறது டெரேனோ.
ஏற்கனவே, எஸ்.யு.வி., வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையும், எஸ்.யு.வி.க்கு மாற விரும்பும் வாடிக்கை யாளர்களையும் கவரும் வண்ணம், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது நிசான் டெரேனோ. 1986ம் ஆண்டு, முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட டெரேனோ, அழகு, சொகுசு மற்றும் செயல்திறன் சிறப்புகளுடன், இரண்டாம் மற்றம் மூன்றாம் தலைமுறையாக, அது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்று, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப் படுவதால், விலையும் நியாயமானதாக, 10 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது. டெரேனோவின் வெளிப்புறத் தோற்றம், கம்பீரமான ஆளுமையை பிரதிப்பலிக்கக் கூடியதாகவும், கூர்மையான கோடுகள் கொண்ட பானட் மற்ற பக்கங்களும், அதேநேரம் மேற்புறம் ஏறி, பின்புறம் இறங்கும் இடங்கள், கூர்மையின்றி மடித்து விடப்பட்ட தோற்றமும், வசீகரமான வடிவமைப்பை கொடுக்கிறது. இதனுடன் பல சொகுசு அம்சங்கள் கொண்ட உட்புற வடிவமைப்புடன் வந்துள்ளது டெரேனோ.
பிரபலமான பாத் பைன்டர் மற்றும் பெட்ரோல் எஸ்.யு.வி.க்களைப் போல, டெரேனோவும் எஸ்.யு.வி. பிரியர்களை மிகவும் கவரும் என்று கூறினார் நிசான். இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர் கெளிச்சிரோ யெமூரா, செப்., 1 முதல், இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பிட்ட நிசான் டீலர்களிடம், நிசான் டெரேனோ முன்பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment