கோவை: சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, "டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, "டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களுக்கும் மாத உதவித்தொகை 1000 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள நபர்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெறலாம்.டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நபர், அரசு மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ சான்று பெற்று, சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்களிடம் விண்ணப்பம் அளித்து, மாத உதவித் தொகை 1000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் உதவித்தொகை ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரிகளாக இருப்பர். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment