Translate

Thursday, 11 April 2013

கோலிவுட் செய்திகள்

50 லட்சம் செலவில் ஒரு பாடல்

4/11/2013 12:42:07 PM
பெரிய ஹீரோ நடிக்கும் படத்துக்கு மட்டுமே செய்யக் கூடிய செலவை ஒரு சின்ன படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக செய்திருக்கிறார்கள். யெஸ், வி சினிமா க்ளோபல் நெட்வொர்க், அகவொளி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘ரணம்’ படத்துக்காகத்தான் ரூ. 50 லட்சம் செலவில் ஒரு பாடலை ஷூட் செய்திருக்கிறார்கள். பிரபு சாலமனின் மாணவரான எஸ்.விஜயசேகரன் இயக்கும் இந்தப் படத்தில் நாயகனாக ஹசனும், நாயகியாக பூனம் கவுர், சுவாசிகாவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர, புதுமுகம் சரத், அகவொளி கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கமுத்து ஆகியோருக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. ‘‘நட்புக்காக ‘எதுவும் தப்பில்ல...’ பாடலுக்கு சினேகன் நடனமாடியிருக்கிறார். அவருடன் பிரபலமான டான்சர்கள் ஆடியிருக்கிறார்கள். மலேஷியாவில் உள்ள டுவின் டவர்ஸ் பகுதியில்தான் இந்தப் பாடலை படமாக்கினோம்...’’ என்கிறார் இயக்குநர் எஸ்.விஜயசேகரன்.

No comments:

Post a Comment