Translate

Sunday, 14 April 2013

நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி மன அழுத்தத்தால் ஓட்டலை விட்டு வெளியேறினேன்

நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி மன அழுத்தத்தால் ஓட்டலை விட்டு வெளியேறினேன்

  ஐதராபாத்: மன அழுத்தம் காரணமாகவே ஓட்டலை விட்டு வெளியேறினேன் என்று நடிகை அஞ்சலி கூறினார்.தனது சித்தி பாரதிதேவியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் களஞ்சியமும் கொடுமைப் படுத்தியதாகக் கூறி கடந்த 8-ம் தேதி ஐதராபாத் ஓட்டலில் இருந்து நடிகை அஞ்சலி வெளியேறினார். இதையடுத்து அஞ்சலியின் சகோதரர் ரவிசங்கர் ‘தனது தங்கையை காணவில்லை’ என்று ஐதராபாத் போலீசில் மனு கொடுத்தார். அஞ்சலியின் சித்தி பாரதிதேவியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளதாக புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு ஐதராபாத் மேற்கு மண்டல் போலீஸ் துணை கமிஷனர் கதிர்பாபு ஆபிஸுக்கு அஞ்சலி வந்தார். அங்கு ஒரு மணி நேரம் தன் தரப்பு நியாயத்தை போலீஸ் அதிகாரியிடம் அவர் தெரிவித்தார். பின்னர் வெளியே வந்த அஞ்சலி, நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, ‘எனக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்த பத்திரிகை மற்றும் மீடியாவுக்கு நன்றி. நான் எங்கேயும் ஓடிப் போகவில்லை. காணாமலும் போகவில்லை. மும்பையில் இருந்தேன். கடந்த சில நாட்களாக எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதனால் ஓய்வு எடுப்பதற்காக தலைமறைவாக இருந்தேன். இந்தி ‘போல்பச்சன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விரைவில் கலந்துகொள்வேன். எனக்கு சோர்வாக இருக்கிறது. மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை.எல்லா விவரங்களையும் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். விரைவில் மொத்த கதையையும் விரிவாக மீடியாவிடம் சொல்கிறேன்’ என்றார்.‘சித்தி, சித்தப்பா கொடுமையால்தான் வீட்டை விட்டு வெளியேறினீர்களா?’ என்று கேட்டதற்கு அதுபற்றி பிறகு சொல்கிறேன் என்று கூறிவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டட்டியுடன் புறப்பட்டு சென்றார்.போலீஸ் அதிகாரி சுதிர் பாபு கூறும்போது, ‘மும்பையில் இருந்ததாக அஞ்சலி தெரிவித்தார்’ என்றார்.

No comments:

Post a Comment