காய்கறிகளின் அவசியம்!
நாம் உண்ணும் உணவிலிருந்தே, நம் உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறோம். இந்த உணவுகளில் முதலிடம் பிடிப்பவை காய்கறிகள். காய்கறிகளில் தான் எல்லாவிதமாக சத்துக்களும் அடங்கியுள்ளன.
ஆனால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் காய்கறியின் அளவு குறைந்து விட்டது. காய்கறிகளைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை என்பது ஒரு காரணமாக இருந்தபோதும், காய்கறி மற்றும் பழ உணவுகளின் இடத்தை, இன்றைய துரித உணவுகள் (Fast food) ஆக்கிரமித்து விட்டன.
துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சத்துக்குறைவு உள்பட பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் 325 கிராம் தானியங்களையும், 375 கிராம் காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த 375 கிராம் காய்கறிகளில் 100 கிராம் கிழங்கு, 150 கிராம் கீரை, 125 கிராம் மற்ற காய்கறிகள் அடங்கும். இதன்படி பார்த்தால் 3 நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு சராசரியாக நாளன்றுக்கு சுமார் ஒரு கிலோ காய்கறி வரை வாங்கியாக வேண்டும்.
ஆனால், நாம் அந்தளவுக்கு காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோமா என்றால், கிடையாது. பெரும்பாலான வீடுகளில் 100 கிராம் காய்கறி எடுத்துக் கொள்வது என்பதே அபூர்வமாக உள்ளது.
இதனால் உடல் பலம் இழந்து, நோய் எதிர்ப்புச் சத்தியும் குறைகிறது. இந்தநிலை தொடர்ந்தால் பல்வேறு நோய்கள் தோன்றும் அபாயம் ஏற்படும். எனவே, தேவையான அளவு காய்கறிகளை உண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.
No comments:
Post a Comment