Translate

Sunday, 14 April 2013

தூக்கு தண்டனைக் கைதி பேரறிவாளன் மனு மீது விசாரணை

தூக்கு தண்டனைக் கைதி பேரறிவாளன் மனு மீது விசாரணை
     ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ள  நிலையில் அது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல்  மனு இன்று மத்திய தகவல் அறியும் ஆணையம் விசாரிக்க உள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தான். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கம் கேட்டு ஆணையத்துக்கு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளன் கருணை மனுவை 2012 ல் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார். காணொளிக்காட்சி மூலம் வழக்கறிஞருக்குப் பதிலாக பேரறிவாளனே தமது தரப்பு வாதங்களை நேரடியாகக் கூற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment