Translate

Wednesday, 15 May 2013

பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்

பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்

சமூக இணையத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டொலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 2012ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்‌தபோதிலும் பங்குவர்த்தகத்தில் களமிறங்குவதற்கான இறுதிமுடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
800 மில்லியன் பயனாளர்களை கொண்ட பேஸ்புக் இணையத்தளத்தை தினமும் குறைந்தது 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment