இந்தியாவை கலக்க வந்த போலரிஸ் ‘ஆப்-ரோடு’ வாகனங்கள்!
கரடு முரடான சாலைகள், மணற்பாங்கான பகுதிகளில் அதிவிரைவாக செல்லும் ஆற்றல்படைத்த ஆப்ரோடு வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போலரிஸ்.
அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆப்ரோடு வாகனங்கள் தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருவதை கவனத்தில்க்கொண்டு களமிறங்கியுள்ளது போலரிஸ்.
ரூ.2.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆப்ரோடு வாகனங்களை இந்தியாவில் போலரிஸ் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளிலுள்ள ஆலைகளிலிருந்து ஆப்ரோடு வாகனங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டிலேயே வாகன உற்பத்தி துவங்கினால், இறக்குமதி வரி கணிசமாக குறையும் என்பதால், விலையையும் குறைக்க போலரிஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே துணை நிறுவனத்தை துவங்கிவிட்ட அந்த நிறுவனம், விரைவில் தனது உயரிய வகை மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளி்ல் இந்தியாவில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment