Translate

Thursday, 6 June 2013

சொத்துக்காக தங்கையை நரபலி கொடுத்த அண்ணன் .!!!

சொத்துக்காக தங்கையை நரபலி கொடுத்த அண்ணன் .!!!




                   ஒரிசா மாநிலம் மயூபஞ்ச் மாவட்டத்தில் அமைந் துள்ளது நிமைன்சாகி கிராமம். இங்கு பெருமளவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி போனவர்கள். இதனால் மனித உயர்கள் பல பலியிடப் பட்டுள்ளன.இவர்களின் மீது நம்பிக்கைக்கு இப்போது மேலும் ஒரு உயிர் கொல்லப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கள் மராண்டி (38). இவரது தங்கை காஜல் (வயது 35). நேற்று முன்தினம் மாலை இவரை மராண்டி ஏமாற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நாகராஜா கோவிலுக்கு அழைத்து சென்றார். சாமி முன்பு மண்டியிட்டு வணங்குமாறு காஜலிடம் கூறினார். அவரும் அவ்வாறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காஜலின் கழுத்தில் வெட்டி தலையை துண்டாக்கினார்.
பின்னர் உடலின் பிறபாகங்களையும் வெட்டி தனித்தனியே எடுத்து, சாமி முன்பு வைத்தார். அவரே கோவிலில் பூஜை நடத்தினார். பின்னர் காஜலின் உடல் பாகங்களை ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு வீடு திரும்பினார். இந்த தகவல் மறுநாள் போலீசாருக்கு எட்டியது. உடனே போலீசார் மராண்டியை கைது செய்ய அவரது வீட்டுக்கு வந்தனர். உடனே அவர் அருகில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்று எல்லையில் வைத்து கைது செய்தனர்.
மராண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றுவிட்டேன். அன்று இரவு கனவில் வந்த பாம்பு கடவுள், இந்த பாவத்தை செய்ததற்காக உனது வீட்டில் உள்ள ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று சொன்னது, மேலும் அப்படி செய்தால் உனக்கு மன அமைதியும், நிறைய சொத்துக்களும் கிடைக்கும் என்று கூறியது.
மன அமைதி மற்றும் சொத்துக்காகவே எனது தங்கையை நரபலி கொடுத்தேன். இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்தார். கடந்த மாதம் இதே மாவட்டத்தில் 2 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment