Translate

Wednesday, 11 September 2013

நடப்பாண்டின் கடந்த 8 மாதங்களில் 349 படுகொலை சம்பவங்கள்

நடப்பாண்டின் கடந்த 8 மாதங்களில் 349 படுகொலை சம்பவங்கள்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையில் 349 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 349 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் கடந்த ஆண்டுடன் மதிப்பிடுகையில் நடப்பாண்டு குறைவாகவே இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதத்தில் 408 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இருப்பினும் ஆண்டு ரீதியில் பார்க்கும் போது  மொத்தமாக 646 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அதன்படி துப்பாக்கிச் சூடு, கத்தக் குத்து, கழுத்து நெரித்து, தாக்குதல் போன்ற பல்வேறு வழிகளில் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment