கர்ப்பப்பை புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிப்பு
இங்கிலாந்து மற்றும் இந்தி யாவும் கூட்டாக நடத்தும் புற்றுநோய் தொடர்பான 2 நாட்கள் மாநாடு கிண்டியில் நேற்று தொடங்கியது. இந்திய மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வெளிநாடு நிறுவனங்கள் ஸ்டால்களை அமைத்து இருத்து. இதில், மருத்துவ கருவிகள், நவீன சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து மியாட் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநரும், இந்தோ- பிரிட்டிஷ் ஹெல்த் இனிஷியேட்டிவ் நிறுவனர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லார்டு காக்கர் ஆகியோர் கூறியதாவது:
இரண்டு நாடுகளும் இணைந்து மருத்துவ துறையில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய் பிரிவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், நாளுக்கு நாள் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.
இந்த மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 55 டாக்டர்கள், லண்டனை சேர்ந்த 20 டாக்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் உள்ள 16 வகையான புற்றுநோய் குறித்து கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோயும், பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோயும் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர். புற்றுநோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வும் மருத்துவ வசதியும் அவசியமாகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment