முகம் ஜொலிக்க இயற்கை வைத்தியம்
பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்கு பார்லருக்கு தான் செல்ல வேண்டும் என்பதல்ல. வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை கொண்டு உங்கள் அழகை மேலும் கூட்டிக்கொள்ளலாம்.
பால்- அனைவரின் வீட்டிலும் காலையில் எழுந்தவுடன் உபயோகப்படுத்தும் முதல் பொருள். இது இயற்கை கிளன்சிங் என்றழைக்கப்படுகின்றது. பச்சை பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் காய வைத்து கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி, மென்மையாக இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
பாதாம் பருப்பு விலை அதிகம் தான். ஆனால் முகத்திற்கு இது ஆரோக்கியமான இயற்கை வைத்தியம். 5 அல்லது 6 பாதாமை எடுத்து அரைத்து முகத்திற்கு பேக் போடலாம். இது முகத்தை பளபளவென்று வைப்பதோடு, பேசியல் செய்தது போன்று ஜொலிக்கும்.
பால் சூடுபடுத்தும் போது மேலே ஆடைக் கட்டும். அதை எடுத்து நன்கு ஆரவிட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம். இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி(வேது) பிடிக்கலாம். மாதம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் படியும் அழுக்குகள் நீங்கும். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் வெந்நீரில் ஒரு கைப்பிடி துளசி மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடிக்கலாம்.
பழத்த பப்பாளி பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசலாம் அல்லது வாழைப்பழ கூழையும் உபயோகிக்கலாம். இது இயற்கை ப்ரூட் பேசியல்.
No comments:
Post a Comment