Translate

Saturday, 28 September 2013

பேச்சு,பேட்டி,அறிக்கை

பேச்சு,பேட்டி,அறிக்கை

குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பேட்டி: தங்களுக்கு விருப்பமில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு உண்டு என, சுப்ரீம் கோர்ட், அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதேபோல், ஓட்டளிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம், நம் ஜனநாயக நடைமுறைக்கு, புதிய அடையாளம் கிடைக்கும். தேர்தலில், பண பலம் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் பேச்சு: முன்பு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் நன்னெறி பாடங்கள் இடம் பெற்றன. காலப்போக்கில், ஆட்சியாளர்கள் அவற்றை படிப்படியாகக் குறைத்து விட்டதால், இளமைப் பருவத்தில், மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டிய நல்லொழுக்கச் சிந்தனை ஊக்குவிக்கப்படவில்லை; ஒழுக்க நெறிமுறையின்றி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேட்டி: வேட்பாளரை நிராகரிக்கும் வாக்காளரின் உரிமையை, சட்ட மேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதை ஆமோதிக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை, அரசியல் கட்சிகள், தேர்தலில் நிறுத்தாத நிலை ஏற்படும்.
இந்தியா–அமெரிக்கா இடையே, அணுசக்தி தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது குறித்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேட்டி: அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பாக, ஓரிரு நாடுகள் மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அணுக்கொள்கைகள், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. பாகிஸ்தானில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இதைப்போக்க, அணுமின் சக்தியும் தேவைப்படுகிறது.
அ.தி.மு.க., எம்.பி., பாலகங்கா பேச்சு: எல்லா தகுதிகளும் உள்ளவர் ஜெயலலிதா. காலம் கனிந்து வந்துள்ளது. அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்துக்காரர்கள், ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இம்முறை, பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தைக் கிழித்து, தூக்கி எறிய வேண்டும் என, ராகுல் சொல்கிறார். ஆனால், அவர் சொல்வது போல, அவசரச் சட்ட வரைவை தூக்கி எறிய தேவையில்லை; அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கட்சியையும், தலைவர்களையும் தான் தூக்கியெறிய வேண்டும்.

தமி­ழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதா­கி­ருஷ்ணன் பேச்சு: தலைவன் என்றால், தொலை­நோக்கு பார்வை வேண்டும். முடங்கிக் கிடப்­பவன் எல்லாம், தலை­வ­னாக முடி­யாது. வாஜ்­பாயின் சிந்­தனை, தொலை­நோக்கு பார்வை, வேகம் கொண்ட மோடி, பிர­த­ம­ராக வேண்டும். கங்கை, கோதா­வரி நதி நீர், கிருஷ்ணா வழி­யாக ஸ்ரீரங்கம் வரும் நாள், வெகு தொலைவில் இல்லை.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: மனித உரி­மைகள் கோட்­பாடு, ஐ.நா., சபையில் இன்றும் இருக்­கு­மானால், ஈழத் தமிழர் படு­கொலை நடத்­திய இலங்கை அரசு மீது, சுதந்­தி­ர­மான பன்­னாட்டு நீதி விசா­ரணை நடத்­து­வ­தற்கு, ஐ.நா., சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மனித உரி­மை­களில் அக்­கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கட­மையைச் செய்ய முன்­வர வேண்டும்.
தமி­ழக காங்­கிரஸ் தலைவர் ஞான­தே­சிகன் அறிக்கை: தமி­ழ­கத்தில் உள்ள மீன­வர்கள் பிரச்­னைக்கு, காங்., அரசு தான் காரணம் என, மோடி கூறி­யுள்ளார். வாஜ்பாய் ஆட்­சியில் தான், 136 பட­குகள் இலங்கை கடற்­ப­டை­யி­னரால் பிடிக்­கப்­பட்டு, அதில், 65 பட­குகள் கடலில் மூழ்­க­டிக்­கப்­பட்­டன. மீத­முள்ள பட­குகள் மற்றும் மீன­வர்­களை, அடுத்து வந்த, காங்., அரசு தான் மீட்­டது என்ற வர­லாற்று உண்­மையை, மோடி அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.
பா.ம.க., நிறு­வனர் ராமதாஸ் அறிக்கை: இது­வரை, தமி­ழக மீன­வர்­களை தாக்­கியும், சுட்டுக் கொன்றும், கொடு­மைப்­ப­டுத்­தியும் வந்த இலங்கை கடற்­படை, இப்­போது, பட­கு­களை பறிக்கும் புதிய பாத­கத்தை துவங்கி உள்­ளது. மீன­வர்­களின் பிழைப்­புக்கு தேவை­யான பட­கு­களை பறித்து, அவர்­களை விடு­தலை செய்­வது, உயிரைப் பறித்து, நடை­பி­ண­மாக அனுப்­பு­வ­தற்கு சமம்.
பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேட்டி: எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டு, தண்­டனை பெற்றால், பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு எதி­ராக மத்­திய அமைச்­ச­ரவை கொண்டு வர முயலும் அவ­சர சட்­டத்­திற்கு, ராகுல் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. இருப்­பினும், இது காங்., தலை­வர்­க­ளி­டையே ஒற்­று­மை­யில்லை என்­ப­தையே காட்­டு­கி­றது.

‘இப்­போ­தைக்கு, அதா­வது, லோக்­சபா தேர்­த­லுக்கு முன், பா.ஜ.,வுடன் கூட்­டணி வைத்து, வெற்றி பெற்றால், கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளியேறி, காங்­கி­ர­சுக்கு ஆத­ரவு தர முடிவு செய்வோம்’ என்­பதை, மறை­மு­க­மாக விளக்கும், தி.மு.க., தலைவர் கரு­ணா­நிதி பேட்டி: பா.ஜ.,வுடன் கூட்­டணி குறித்த கருத்­துக்கு, நாங்கள் எந்த நிலைப்­பாட்­டையும் எடுக்­க­வில்லை. எடுத்­தாலும் இப்­போது அதைவெளி­யிட விரும்­ப­வில்லை.

No comments:

Post a Comment