Translate

Monday, 7 October 2013

2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி

2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி

இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்தும் இதன் சமுதாய, பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் கே.பி.எம்.ஜி. அமைப்பு, வரும் 2015 ஆம் ஆண்டில், இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 48 லட்சமாக உயரும் என அறிவித்துள்ளது.
இதனால், இணையம் வழி சந்தை வாய்ப்புகள் பெரும் அளவில் பெருகி வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக, மொபைல் வழி சந்தை வாய்ப்புகள், இந்தியாவில் தான் இருக்கும் எனவும் இந்த அமைப்பின் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. சமுதாய இணைய தளங்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் வழியே இந்த பயன்பாடு உயர்ந்து வருகிறது. இந்த தளங்கள் மூலம், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தக பொருட்களின் மதிப்பை உயர்த்த பல வழிகளைப் பெற்று வருகின்றனர். தனி நபர் இணையப் பயன்பாடு, குறிப்பாக சமூக இணைய தளப் பயன்பாடு, வர்த்தக வாய்ப்புகளை உயர்த்தி வருகிறது. இப்பழக்கத்தினை, மக்கள் வாங்கும் விலையில், தற்போது சந்தைக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்களும் அதிகரிக்கச் செய்து வருகின்றன.
சமூக இணையப் பரிவர்த்தனை என்பது, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் மட்டுமின்றி, யு ட்யூப், வலைமனைத் தளங்கள் போன்றவை மூலமும் அதிகமாகி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, பல மீடியா நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இணையத்தில் இடம் பெற்று, தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும், வர்த்தகத்தினையும் உயர்த்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

No comments:

Post a Comment