32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை
ஒரு வாரத்துக்கு மேல் மீசையை கத்தரிக்காமல் இருப்பதே அரிதான விடயம். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் 32 வருடங்களாக தனது மீசையை கத்தரிக்காது உலகின் மிக நீளமான மீசைக்கு சொந்தக்காரர் என்ற பெருமையைப் தக்கவைத்துள்ளார்.
இந்தியாவின் ஜெய்பூரைச் சேர்ந்த 58 வயதான ராம்சிங் சௌஹான் என்பவரே இப்பெருமைக்குச் சொந்தக்காரராவார்.
14 அடி நீளமான இவரது மீசையால் உலகின் மிக நீளமான மீசையுடைய நபர் என 2012ஆம் ஆண்டில் கின்னஸில் இடம்பிடித்தார் சொஹான். இவர் தனது மீசையை பாராமரிக்க நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் செலவிடுகின்றாராம்.
தனது மீசை குறித்து சௌஹான் கூறுகையில், “1980ஆம் ஆண்டு முதல் எனது மீசையை நான் கத்தரித்ததில்லை. ஆனால் நான் உலகசாதனை படைக்கும் நோக்கில் மீசை வளர்க்க ஆரம்பிக்கவில்லை.
குழந்தையைப் போல எனது மீசையை பாராமரிக்கின்றேன். 14 அடி நீளத்துக்கு மீசையை வளர்ப்பது சாதாரண விடயமல்ல. எங்காவது நான் சென்றால் வியப்புடன் என்னை மக்கள் பார்க்கின்றனர்.
மீசை ஆண்களுக்கான ஓர் அடையாளம். இளைஞர்கள் ஒவ்வொருவரும் மீசை வளர்க்கவேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு மீசை வளர்ப்பதில்லை ” எனத் தெரிவித்துள்ளார்.
சௌஹரின் மனைவி மற்றும் அவரது இரு மகள்களும் மகனும் சௌஹானின் மீசையால் பெருமைகொள்கின்றனர். கடந்த 30 வருடங்களாக ராஜஸ்தான் சுற்றுலா துறையின் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.
சாதனைகள் முடியடிக்கப்படக் கூடியவை எனது சாதனை மற்று மொரு இந்தியனால் முறியடிக் கப்பட வேண்டும் என தான் ஆசைப்படுவதாக தற்போதும் மீசை வளர்த்துக் கொண்டிருக்கும் சௌ ஹான் குறிப்பிட்டுள்ளார்.
Tags: இந்தியா, மீசை
No comments:
Post a Comment