Translate

Tuesday, 29 October 2013

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ் தெருக்களில் ஓட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கார் ஓடுவதற்கு வசதியாக அகலமான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 100 கார்கள் தயார் நிலையில் உள்ளன.

இக்கார்கள் எதிர்வரும் 2015–ம் ஆண்டின் தொடக்கத்தில் ஓட தொடங்கும் இவற்றில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதனுடன் தேவையான பொருட்களையும் எடுத்து செல்ல முடியும்.

இது மணிக்கு சுமார் 19 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும். அதற்கான கட்டணம் 2 பவுண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: கார், சாரதி

No comments:

Post a Comment