Translate

Tuesday, 1 October 2013

பாக்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய படிப்பு

பாக்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய படிப்பு

பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் எனப்படும் பாக்ட் நிறுவனம் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரசித்தி பெற்ற உரத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. உரம் மற்றும்
கேப்ரோலாக்டம் தயாரிப்புக்காக இந்த நிறுவனம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் படிப்புடன் கூடிய பணி வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள்: சில குறிப்பிட்ட உபகரணங்களை இயக்குவது குறித்த அடிப்படைப் படிப்புடன் கூடிய பயிற்சியாகும் இது. எனவே கிரேன், எக்ஸ்கலேட்டர், பிரண்ட் எண்டு லோடர், போர்க் லிப்ட் போன்ற பிரிவுகளில் உபகரணங்களை இயக்கும் பயிற்சி மற்றும் பணி வாய்ப்பை பெற முடியும்.
தகுதிகள்: இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் மூன்று வருட டிப்ளமோ படிப்பு அல்லது பி.இ.,/பி.டெக்., படிப்பு, பி.எஸ்.சி., அல்லது எம்.எஸ்.சி., படிப்பை இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விபரங்கள்: பாக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட பிரிவுகளில் போர்க் லிப்ட் பிரிவுப் பயிற்சிக்கு ரூ.6742/-ம், இதர பிரிவுகளுக்கு ரூ.16854/-ம் பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சியைப் பெற விரும்பினால் கட்டணத்தில் ரூ.1150/- தள்ளுபடி உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை இந்த முகவரிக்கு 01.10.2013க்குள் அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.
Dy.Manager (Trg), FACT Training Centre,
Udyogamandal - 683501
விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.10.2013
முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி :
http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/16thbatch.pdf

 

No comments:

Post a Comment