Translate

Saturday, 16 November 2013

179 அமெ. டொலர் விலையில் குவாட் கோர் ஸ்மார்ட் போன்

179 அமெ. டொலர் விலையில் குவாட் கோர் ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன் விற்பனையானது உலகம் பூராகவும் அமோகமாக இடம்பெற்று வருகின்றது.
சாதாரண போன்களை விட ஸ்மார்ட் போன்களின் விற்பனை குறிப்பிடத்தக்களவு வேகத்தில் அதிகரித்து வருகின்றமையை ஆய்வுகளின் முடிவுகள் காட்டி நிற்கின்றன.

எனினும் ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்கு ஆர்வம் இருந்த போதிலும் அவற்றின் விலை காரணமாக பலருக்கு அது சாத்தியமற்று போகின்றது.

தற்காலத்தில் சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அவற்றின் தரம், தயாரிக்கும் நிறுவனங்கள் சந்தையில் நன்கு அறியப்படாமை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு பலர் அவற்றை வாங்க அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் குறைந்த விலையில் நல்ல தரமான ஸ்மார்ட் போனை கொள்வனவு செய்ய கனவு காண்போரின் கனவுகளை நனவாக்கும் வகையில் ஸ்மார்ட் போன் ஒன்றை மோட்டோரொல்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆம், 179 அமெரிக்க டொலர் விலை குவாட் கோர் புரசசருடன் கூடிய ஸ்மார்ட் போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மோட்டோ ‘ஜி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வருமாறு:

4.5-inch HD Corning Gorilla Glass 3 display with 720×1280 pixel resolution
1.2GHz quad-core Qualcomm Snapdragon 400 processor
Adreno 305 GPU
1GB of RAM
8GB and16GB storage variants, no expandable storage
Android 4.3 Jelly Bean (upgrade to v4.4 KitKat due in January 2014)
Dual-SIM variant (for select markets)
2070mAh battery
Wi-Fi, Bluetooth, 3G, GPS, A-GPS, GLONASS

இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாதிரி 179 அமெரிக்க டொலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடியது 199 அமெரிக்க டொலர்களாகவும் விலையிடப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஸ்மார்ட் போன் சந்தைகளைக் கொண்ட பிரேசில் மற்றும் இந்தியாவை இலக்குவைத்தே கூகுள் இதனை வெளியிட்டுள்ளது.

மோட்டோரொல்லா மொபைல் நிறுவனத்தை கூகுள் கொள்வனவு செய்த போதிலும் அந்நிறுவனம் தொடர்ந்தும் ஸ்மார்ட் போன் சந்தையில் தன்னை தக்க வைக்க முடியாமல் தடுக்கி வருகின்றது.

எனினும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பல முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது,

அதில் ஒரு அங்கமாகவே குறைந்த விலை ஸ்மார்ட் போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டோரொல்லாவின் முயற்சி வெற்றியளிக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

No comments:

Post a Comment