Translate

Monday, 4 November 2013

நான்கு சக்கர வாகனங்கள் வரும் 25ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி ரிலீஸ்?

நான்கு சக்கர வாகனங்கள்
வரும் 25ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி ரிலீஸ்?

வரும் 25ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காம் தலைமுறை காராக வரும் புதிய ஹோண்டா சிட்டி தோற்றத்திலும், பெர்ஃபார்மென்சிலும் இன்னும் சிறப்பாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

 
மேலும், டீசல் எஞ்சினுடன் ஹோண்டா சிட்டி வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், சிட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட கிரைடர் செடான் காரின் டிசைன் தாத்பரியங்கள் பலவற்றை புதிய சிட்டி பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய சிட்டி வருகை போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என விபரம் அறிந்த வட்டாரத் தகவல்கள் அடித்து கூறுகின்றன.

ஆனால், புதிய சிட்டி காரின் அறிமுகம் செய்வது குறித்து ஹோண்டா கார் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

No comments:

Post a Comment