Translate

Monday, 25 November 2013

மைக்ரோமேக்ஸ் ஏ74 கேன்வாஸ்

மைக்ரோமேக்ஸ் ஏ74 கேன்வாஸ்

அண்மையில் வெளியான ஆண்ட்ராய்ட் போன்களில், மைக்ரோமேக்ஸ் ஏ 74 கேன்வாஸ் பன் என்ற மொபைல் போன், பலரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 133 து 67 து 10.10 மிமீ . இதன் திரை மல்ட்டி டச் இயக்கம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் ஸ்டோரேஜ் திறனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத் ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதன் கேமரா, ஆட்டோ போகஸ் வசதியுடன், 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.
இதனை இயக்கும் ப்ராசசர், டூயல் கோர் திறனுடன் 1,300 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதில் இருவகை(கிராவிட்டி, ப்ராக்ஸிமிட்டி) சென்சார்கள் இயங்குகின்றன. எம்.பி.3 பிளேயர், கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், வேர்ல்ட் கிளாக், காலண்டர் மற்றும் அலார்ம் போன்ற வசதிகளும் உள்ளன. இதில் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன் கிடைக்கிறது. மின்சக்தி 155 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம்.

No comments:

Post a Comment