அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
குளியல்
குழந்தை நிறுத்தாமல் அழுதால், அப்போது வெதுவெதுப்பான நீரில் அவர்களை குளிப்பாட்டினால், குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.
வயிற்றை தேய்த்து விடுவது
அழும் குழந்தையை சமாதானப்படுத்த வேண்டுமானால், அவர்களின் வயிற்றை தேய்த்துவிட வேண்டும்.
பாட்டு பாடலாம்
குழந்தையின் அழுகையை நிறுத்த பாட்டு பாடலாம். இதனால் அவர்களின் கவனம் திசைத்திரும்பி, அழுகையை நிறுத்தி, சிரிக்க ஆரம்பிப்பார்கள்.
வெளியே அழைத்து செல்லலாம்
அழும் குழந்தைகளை நன்கு பச்சை பசேலென்று இருக்கும் தோட்டத்திற்கோ அல்லது பூங்காவிற்கோ அழைத்து சென்றால், அந்த பச்சை நிற செடிகளானது குழந்தையின் கவனத்தை ஈர்த்து அழுகையை நிறுத்தும்.
சப்தம்
பொதுவாக குழந்தையின் கவனத்தை எளிதில் திசைத் திருப்பலாம். அதிலும் அதனை அழும் போது செய்தால், இன்னும் நல்லது. அதற்கு வித்தியாசமான சப்தத்தை எழுப்பினால், அவர்கள் அழுகையை நிறுத்திவிட்டு, அந்த சப்தத்தை கவனிக்க ஆரம்பிப்பார்கள்.
ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றவும்
குழந்தையை ஒரே கையில், ஒரே பக்கத்தில் வைத்திருந்தாலும் அவர்கள் அழ ஆரம்பிப்பார்கள். ஆகவே அவர்கள் அழும் போது, உங்கள் கணவர் அல்லது உங்கள் தாயிடம் கொடுங்கள். இதனாலும் அவர்களது அழுகை நிற்கும்.
மசாஜ்
குழந்தையின் கால்களை மசாஜ் செய்வதன் மூலமும், அவர்களது அழுகையை நிறுத்தலாம். எனவே குழந்தை அழும் போது, குழந்தைகளுக்கான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து விடுங்கள்.
வித்தியாசமான தோற்றம்
குழந்தைகள் எப்போதும் வித்தியாசமாக முக பாவணையை கொண்டு வந்தால், சிரிப்பார்கள். ஆகவே குழந்தை அழும் போது முக பாவணையை மாற்றி மாற்றி காண்பியுங்கள்.
செல்லப்பிராணிகள்
குழந்தையின் அழுகையை நிறுத்துவதில் செல்லப் பிராணிகளும் உதவும். ஏனெனில் செல்லப் பிராணிகளின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால், அவர்கள் அழுகையை மறந்து, அதன் தோற்றத்தையே உற்று நோக்குவார்கள்.
மீன்கள்
தொடர்ச்சியாக குழந்தை அழுதால், அப்போது அவர்களை வண்ண மீன்கள் நிறைந்த மீன் தொட்டியின் அருகில் அழைத்து செல்லுங்கள். இதனால் மீன்களின் நிறங்கள் குழந்தையின் கவனத்தை திசைத்திருப்பும்.
மென்மையான பொம்மைகள்
டெடி பியர் அல்லது மற்ற மென்மையான பொம்மைகளும் குழந்தையின் அழுகையை நிறுத்தும். ஆகவே அவர்கள் அழும் போது, அவர்களுக்கு மென்மையாக இருக்கும் பொம்மைகளைக் கொடுங்கள்.
குழந்தையின் நிலையை மாற்றுங்கள்
ஒருவேளை குழந்தை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்து, வசதியின்மையால் அழுதால், அப்போது அவர்களின் நிலையை மாற்றினால், அவர்கள் அழுகையை நிறுத்துவார்கள்.
நாப்கின் மாற்றுங்கள்
குழந்தை பால் குடித்த பின்னரும் அழ ஆரம்பித்தால், அவர்களின் நாப்கின்னை கவனியுங்கள். ஏனெனில் நாப்கின் அதிகப்படியான ஈரத்துடன் இருந்தாலும், குழந்தை அழுவார்கள்.
குழந்தை பிறந்த பின் ஒவ்வொரு பெற்றோர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் குழந்தை அழுவதை நிறுத்த தெரியாமல் திணறுவது. பொதுவாக குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் அதன் அழுகையை நிறுத்த முடியும். அதிலும் குழந்தை பசி மற்றும் நாப்கின் அதிகப்படியான ஈரத்துடன் இருந்தால் அழுவார்கள்.
சில நேரங்களில் காரணமே இல்லாமல் அழுவார்கள். அப்படி காரணமின்றி குழந்தை அழுதால், அக்காலத்தில் எல்லாம் பாட்டு பாடி அழுகையை நிறுத்தினார்கள். அதனால் இன்றும் பலர் இந்த முறையை பின்பற்றுகின்றனர். ஆனால் குழந்தையின் அழுகையை நிறுத்த இந்த ஒருமுறை மட்டும் தான் உள்ளது என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரணமானவையே.
இப்போது அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதற்கான சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்தால், நிச்சயம் குழந்தையின் அழுகையை நிறுத்திவிடலாம்.
No comments:
Post a Comment