அமேஸ் சக்சஸ்... வாடிக்கையாளர்களுக்கு கிப்ட் பாக்ஸ் அனுப்பும் ஹோண்டா!
விற்பனையில் ஹோண்டா அமேஸ் கார் 50,000 என்ற புதிய மைல்கல்லை விரைவில் எட்ட இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் காம்பெக்ட் செடான் கார் ஹோண்டாவுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது. இதனை கொண்டாடுவதற்கு சிறப்பு திட்டங்களை ஹோண்டா செயல்படுத்த உள்ளது.
அமேஸ் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட் பரிசு பெட்டியுடன், நன்றி நவிலல் கடிதத்தையும் அனுப்ப உள்ளது. மேலும், சிறப்பு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் அமேஸ் வாடிக்கையாளர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லும் வாய்ப்பையும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 31ந் தேதி வரை அமேஸ் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment