எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவன பணிவாய்ப்பு
எச்.எல்.எல்., லைப்கேர் என்பது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இது சுகாதாரம் தொடர்புடைய பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது என்ற போதும் கருத்தடை தொடர்புடைய பொருட்களின் தயாரிப்புக்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் டிரெய்னிங் அண்டு டெவலப்மெண்ட் ஸ்கீமின் கீழ் கிராஜூவேட் டிரெய்னி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தின் பட்டதாரி பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய தகவல்கள் : இந்தப்பதவிக்கு ஸ்டைபண்டு அடிப்படையில் பணி புரிய வேண்டும்.
முதல் ஆண்டில் மாதம் ரூ.4 ஆயிரம், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.5 ஆயிரம், 3ம் ஆண்டில் மாதம் ரூ.6 ஆயிரம் "ஸ்டைபண்டாக' கிடைக்கும். வேலை கிடைத்தவர்கள் திருவனந்தபுரத்தில் பணி புரிய வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : வயது, கல்வித் தகுதி போன்றவற்றிற்கான அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பரிந்துரைக்கப்பட்ட டவுன்லோடு செய்யப்பட்ட படிவ மாதிரியிலான ரெஸ்யூமை அனுப்ப வேண்டும்.
முகவரி: The Deputy Manager
(HR), HLL Lifecare Ltd, HLL BHAVAN,
Poojapura, Trivandrum - 695012,Kerala.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 27.11.2013
No comments:
Post a Comment