Translate

Monday, 11 November 2013

எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்

எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்

சென்ற அக்டோபர் தொடக்கத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின், ஜி ப்ரோ லைட் டூயல் ஸ்மார்ட் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 22,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்: ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்சியுடன் 5.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்,டூயல் சிம் இயக்கம், BSI சென்சார் கொண்ட 8 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், இரண்டாவதாக, வீடியோ அழைப்பிற்கென 1.3 எம்பி திறன்
கொண்ட கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, ஒரு ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனுடன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, மற்றும் A2DP இணைந்த புளுடூத் 3 ஆகியவை உள்ளன.
இதன் பரிமாணம் 150.2 x76.9 x 9.48 மிமீ. இதன் பேட்டரி 3140 mAh திறன் கொண்டது.

No comments:

Post a Comment