Translate

Monday, 11 November 2013

இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா

இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா

இந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது. இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment