Translate

Wednesday, 6 November 2013

எல்லையோரப் படையில் வாய்ப்பு

எல்லையோரப் படையில் வாய்ப்பு

இந்திய சீன எல்லையில் உள்ள பகுதிகளில் தேசப் பற்றுணர்வை வளர்க்கும் விதத்தில் 1962ல் சகஸ்ட்ர சீமா பால் எனப்படும் எஸ்.எஸ்.பி., படை நிறுவப்பட்டது. முதலில் இந்திய சீன எல்லைப் பகுதிகளை மையம் வைத்து இந்தப் படை நிறுவப்பட்டாலும், பின்னர் இது அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் படையில் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து குரூப் சி பிரிவு, நான் கெசடடு, மினிஸ்டிரியல் ஹெட் கான்ஸ்டபிள் பதவியில் உள்ள 110 காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதிகள்: பிளஸ்2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி டைப்ரைட்டிங்கில் கம்ப்யூட்டரில் முறையே 35 மற்றும் 30 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறமை தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம், இதர இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
THE DY INSPECTOR GENERAL, SECTOR HQ, SSB RANIDAGA, POST OFFICE: MATIGARA,
DIST: DARJEELING (WEST BENGAL) PIN: 226 010
விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.11.2013
முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.ssbrectt. gov.in/default.aspx

 

No comments:

Post a Comment