Translate

Wednesday, 27 November 2013

மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ‘ஆப்பு’ வைக்க காத்திருக்கும் ரோபோக்கள்

மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ‘ஆப்பு’ வைக்க காத்திருக்கும் ரோபோக்கள்

தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனிதர்கள் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தமை வரலாறாகவுள்ளது.

எதிர்காலத்தில் ரோபோக்களின் முன்னேற்றங்களால் மனிதர்களின் வேலைவாய்ப்பு மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

எதிர்காலத்தில் இத்தகைய நிலை வரலாம் என பல தசாப்தங்களுக்கு முன்னரே பலர் எதிர்வுகூறியுள்ளனர்.

ஆனால், புத்திகூர்மையான ரோபோக்களால், முன்னர் எதிர்பார்த்ததைவிட விரைவாக மனித வேலை வாய்ப்புகள் மறையக்கூடும் என பிரிட்டனைச் சேர்ந்த செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிறுவனமான செலாட்டன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ட்ரூ அண்டர்சன் கூறுகிறார்.

2018ஆம் ஆண்டளவில் அலுவலக இலிகிதர் பணிகள் போன்றவை மறைந்துவிடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கணினித் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். தனது வாடிக்கையாளர் சேவை முகாமையாளராக வட்ஸன் எனும் சுப்பர் கம்பியூட்டர் ஒன்றை செயற்பட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டளவில் சுயமாக தன்னை புரோகிராமிங் செய்துகொள்ளவும், திருத்தங்கள் செய்யவும் , மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் இயந்திரங்கள் கற்றுக்கொள்ளக்கூடும் என செயற்கை அறிவுத்துறை நிபுணரான மஸிமோ பார்பட்டோ என்பவர் கூறியுள்ளார்.

ஐ.ஓ.எஸ். டெவலப்பர், அன்ட்ரொய்ட் டெவலப்பர், கணக்கியலாளர், நிர்வாக உதவியாளர் போன்ற பணிகளை ரோப்போக்கள் ஆக்கிரமிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment