Translate

Sunday, 10 November 2013

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் புதிய ஜாகுவார் எஃப் டைப் கூபே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் புதிய ஜாகுவார் எஃப் டைப் கூபே!

மிக அசத்தலான டிசைனுடன் வரும் ஜாகுவார் எஃப் டைப் கூபே காரின் டீசரை ஜாகுவார் வெளியிட்டுள்ளது. மேற்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் பலரது ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறது.

வரும் 19ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சியிலும், மறுநாள் டோக்கியோவில் நடைபெற உள்ள வாகனக் கண்காட்சியிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு எஃப் டைப் காரின் கன்வெர்ட்டிபிள் கார் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது மிக அழகான டிசைனில் கூபே காரும் வர இருக்கிறது.

 
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த கன்வெர்ட்டிபிள் காரில் 335 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி6 எஞ்சினும், 375 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி6 எஞ்சினும், 488 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. இந்தியாவில், இரண்டாவது, மூன்றாவது கொடுக்கப்பட்ட எஞ்சின் மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்திலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

கூரையுடன் வருவதால் கன்வெர்ட்டிபிள் மாடலைவிட சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.3 நொடிகளில் எட்டும். மணிக்கு 300 கிமீ வேகம் செல்லத்தக்க டாப் ஸ்பீடு கொண்டதாக வரும். இந்த நிலையில், எஃப் டைப் கூபே காரில் அதிக சக்திவாய்ந்த புதிய எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்ய ஜாகுவார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment