Translate

Monday, 23 December 2013

இரண்டு மாதத்தில் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனை

இரண்டு மாதத்தில் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனை

சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி நோட் 3 சாதனத்தை சென்ற செப்டம்பர் 25ல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. நவம்பர் 25 வரை மொத்தம் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனைக்கு, விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சாம்சங் அண்மையில் அறிவித்துள்ளது.
முதல் காலக்ஸி நோட், அக்டோபர் 2011ல் வெளியானது. இதன் விற்பனை ஒரு கோடி என்ற எண்ணிக்கையை எட்ட 9 மாதங்கள் ஆனது. இதே போல, காலக்ஸி நோட் 2 விற்பனை ஒரு கோடியை எட்ட 4 மாதங்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் இரண்டே மாதங்களில், இந்த எண்ணிக்கையை காலக்ஸி நோட் 3 எட்டியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 3 சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் என, 58 நாடுகளில் முதல் கட்டமாக விற்பனை செய்யப்பட்டது. இதனுடைய LTE மாடல், அமெரிக்காவிலும் ஐரோப்பியாவிலும், மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. அண்மையில், காலக்ஸி நோட் 3யினை மேலும் மூன்று வண்ணங்களில், சாம்சங் வெளியிட்டது.
நடப்பு 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங்க் காலக்ஸி எஸ் 4 மொபைல் போன், ஒரு மாதகால அளவிற்கு முன்னதாகவே, ஒரு கோடி விற்பனையானது. சென்ற ஆண்டில், காலக்ஸி எஸ் 3, 50 நாட்களில் இந்த எண்ணிக்கையை எட்டியது. காலக்ஸி எஸ் 4 உடன் ஒப்பிடுகையில், எஸ்3 விற்பனை வேகம் சற்று குறைவு தான்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களை ஒப்பிடுகையில், மக்கள் சாம்சங் எஸ் வரிசை சாதனங்களையே அதிகம் விரும்புகின்றனர் என்று தெரிகிறது. காலக்ஸி நோட் சாதனங்கள் அடுத்த இடத்தையே கொண்டுள்ளன.

No comments:

Post a Comment