Translate

Friday, 27 December 2013

ஜனவரி 7ல் விற்பனைக்கு வரும் புதிய ஹோண்டா சிட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 7ல் விற்பனைக்கு வரும் புதிய ஹோண்டா சிட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 7ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அப்போது வெளியிடப்படும். இதனிடையே, டீசல் மாடலிலும் புதிய ஹோண்டா சிட்டி கார் வருவதால் வாடிக்கையாளர்களிடம் அதிக ஆவல் காணப்படுகிறது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய சிட்டி காருக்கு முன்பதிவு நடந்து வருகிறது. ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் டெலிவிரி துவங்கும் என டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருவதுடன், லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுவதால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையையும் பெற இருக்கிறது.

No comments:

Post a Comment