அதிகரிக்கும் மைக்ரோமேக்ஸ் மொபைல் விற்பனை...!
இன்று ஆண்ட்ராய்டின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது எனலாம், மிகக் குறுகிய காலத்தில் வெளிவந்து அனைத்து மொபைல்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டது ஆண்ட்ராய்டு.
இன்ற பட்ஜெட் விலையில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க விரும்புபவர்களுக்கென, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் போல்ட் ஏ 61 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,999 மட்டுமே.
மைக்ரோமேக்ஸ் தன் போல்ட் வரிசையில், அண்மைக் காலத்தில் வெளியிட்ட போன் இது.
இதில் 4 அங்குல அகலத்தில் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை கிடைக்கின்றன.
இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல்கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன.
3ஜி நெட்வொர்க் இணைப்புடன், இரண்டு சிம் இயக்கமும் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் ராம் மெமரி 256 எம்.பி., ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. கிடைக்கிறது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதில் அமைந்துள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன், 3.55 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது.
No comments:
Post a Comment