இந்திய கப்பல் படையில் வேலை
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய மூன்று படைகளில் இந்தியக் கடல் படையும் ஒன்று. நவீனமய உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்தப் படை சர்வதேச தரத்துடன் இருப்பதுடன் அனைவராலும் அறியப்படுகிறது. இந்தப் படையில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : 01.08.1984க்கு பின்னரும், 31.01.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பு, கணிதம் மற்றும் இயற்பியலில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி, வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தை இந்த அளவில் படித்திருத்தல்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்ச்சி இருக்கும். உடல் தகுதிகள் (குறைந்த பட்சம் ): உயரம் 157 செ.மீ., மார்பு விரியும் தன்மை 5 செ.மீ., நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைனில் பதிவு, பிரிண்ட் அவுட்டை எடுத்து உரிய இணைப்புகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.12.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
PB no. 476,Goldakkhana,GPO, New Delhi 110001.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.12.2013
இணையதள முகவரி : www.nausena&bharti.nic.in
No comments:
Post a Comment