ஐந்தில் நான்கு போன்களில் ஆண்ட்ராய்ட்
வெகுவேகமாக அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன்களில், ஐந்தில் நான்கு போன்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில், ஐ.டி.சி. எடுத்த ஆய்வு முடிவு இதனைத் தெரியப்படுத்துகிறது. சென்ற ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 74.9 சதவீதம் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இது 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தினைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இது பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது.
News24 தெரிவித்துள்ளபடி, இந்தக் கணிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டமும் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு, 2 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்த விண்டோஸ் போன் சிஸ்டம், தற்போது அதன் பங்கினை 3.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. விண்டோஸ் சிஸ்டம் கொண்ட மொபைல் போன் விற்பனை 156 சதவீதம் உயர்ந்துள்ளது. இவற்றில் 90 சதவீத போன்கள், மைக்ரோசாப்ட் வாங்கியுள்ள நோக்கியா நிறுவனப் போன்களாகும்.
ஆப்பிள் நிறுவன போன்களின் விற்பனை, அண்மையில் அறிமுகமான இரண்டு புதிய மாடல் போன்களினால் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 90 லட்சம் போன்கள் விற்பனை ஆகும் என்று அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment