ஃபாஸ்ட்ராக் ஹெல்மெட்டுகள் விற்பனைக்கு வந்தன - விலை விபரம்
டைட்டான் இன்டஸ்ட்ரீஸ் கீழ் செயல்படும் ஃபாஸ்ட்ராக் நிறுவனம் கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் பிரபலமானது. இந்த நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் அணிவதற்கான ஹெல்மெட் விற்பனையிலும் இறங்கியுள்ளது.
24 விதமான மாடல்களிலான ஹெல்மெட்டுகளை ரூ.1,495 முதல் ரூ.3,495 விலை வரையிலான விலை பட்டியலில் விற்பனைக்கு விட்டுள்ளது.
ஃபாஸ்ட்ராக் நிறுவனத்துக்கு ஹெல்மெட் தயாரிப்பதற்கு சொந்தமாக ஆலை இல்லை. இத்தாலியை சேர்ந்த ஏஜிவி ஹெல்மெட் நிறுவனத்தின் குஜராத் ஆலையில் ஹெல்மெட்டுகளை தயாரித்து பெறுகிறது.
பாதுகாப்பு, தரம் என அனைத்து அம்சங்களிலும் ஃபாஸ்ட்ராக் ஹெல்மெட்டுகள் இருக்கும் என்று டைட்டான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment