Translate

Sunday, 8 December 2013

பெண்களின் மன அழுத்தத்தை கண்டறியும் மார்புக்கச்சை

பெண்களின் மன அழுத்தத்தை கண்டறியும் மார்புக்கச்சை

மன அழுத்­தத்தை கண்­டு­பி­டித்து எச்­ச­ரிக்­கக்­கூ­டிய மார்புக்கச்­சை­யொன்றை அமெ­ரிக்க வாஷிங்டன் நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் பல்­தே­சிய தொழில்நுட்பக் கம்­ப­னி­யான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் வடி­வ­மைத்­துள்­ளனர்.

இரு­தய மற்றும் தோல் செயற்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் அகற்­றக்­கூ­டிய உணர்கரு­வி­களைக் கொண்ட இந்த மார்­புக்­கச்சை பயன்­பாட்­டா­ள­ரது மன நிலையில் ஏற்­படும் மாற்­றங்­களை சுட்டிக் காட்­டு­கி­றது.

மன அழுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அள­வுக்­க­தி­க­மாக உண்ணும் பழக்­கத்தை குணப்படுத்துவதை இலக்­காகக் கொண்டே இந்த அணி­யக்­கூ­டிய தொழில்நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

உணர்­க­ரு­விகள் இரு­த­யத்­துக்கு நெருக்­க­மாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதற் காகவே இந்த தொழில்நுட்­பத்தை மார்­புக்­கச்சை வடிவில் பயன்­ப­டுத்த தீர்­மா­னித்­த­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­தனர்.

மேற்­படி தொழில்நுட்­பத்தை ஆண்­க­ளுக்­கான கீழ் உள்­ளா­டையில் பயன்­ப­டுத்­தி­ய­போது உணர்­க­ரு­வி­க­ளுக்கும் இரு­த­யத்­துக்­கு­மி­டை­யி­லான தூரம் அதி­க­மாக இருந்­ததால் உரிய பெறு­பே­று­களைப் பெற முடி­ய­வில்லை என அவர்கள் குறிப்­பிட்­டனர்.

இந்­நி­லையில் மேற்­படி மார்புக்கச்­சை­யா­னது 4 நாட்­களில் தின­சரி சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் பெண்­களால் அணியப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அந்த மார்பு கச்சையிலுள்ள உணர் கருவிகளை 2 மணித்தியாலத்திலிருந்து 4 மணித்தியாலம் வரை மின்னேற்றி பயன் படுத்த முடியும்.

No comments:

Post a Comment