Translate

Tuesday, 24 December 2013

எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..

எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..

இன்று நோக்கியாவை தவிர அனைத்திலும் ஆண்ட்ராய்டு வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு உலகை தன் வசம் வைத்துள்ளது.

மொபைல் வாங்க செல்வோரின் முதல் தேர்வு அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அது என்ன எந்த கம்பெனி மொபைலாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் வேண்டும் என்று தான் மக்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் சோனியின் Xperia Z, ZL, ZR மற்றும் Xperia Tablet Z ஆகிய மொபைல்களை நீங்கள் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்கான ஆண்டராய்டு அப்டேட்டை சோனி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.

இந்த மொபைல்களில் எந்த வெர்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் தற்போது நீங்கள் ஜெல்லி பீன் 4.3 க்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம் என்று இன்று அறிவித்துள்ளது சோனி.

மேலும், இதை இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது சோனி உங்ககிட்ட சோனி மொபைல் இருக்கா அப்ப உடனே அப்டேட் பண்ணுங்க ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனை.

No comments:

Post a Comment