Translate

Monday, 23 December 2013

எல்.ஜி. ப்ளெக்ஸ் இந்தியாவில் அறிமுகம்!

எல்.ஜி. ப்ளெக்ஸ் இந்தியாவில் அறிமுகம்!

வளைந்து கொடுக்கும் தன்மையுடன் கூடிய மொபைல் போன் ஒன்றை, முதன் முதலாக, எல்.ஜி.நிறுவனம் வடிவமைத்தது. எல்.ஜி. ப்ளெக்ஸ் என அழைக்கப்படும் இந்த மொபைல் போனை, அண்மையில் இந்தியாவிலும், டில்லியில் அறிமுகம் செய்தது. இது, வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வரும் 2014 பிப்ரவரியில் வரும். இன்னும் இதனுடைய விலை குறித்து, எல்.ஜி. எதுவும் அறிவிக்கவில்லை.
எல்.ஜி. ப்ளெக்ஸ் போனின் சில சிறப்பம்சங்கள்:
ஆறு அங்குல, முனைகளில் வளைந்த பிளாஸ்டிக் OLED டிஸ்பிளே தரும் திரை. இதன் பிக்ஸெல்கள் 1280 x 720 என்ற வகையில் அமைந்துள்ளது. மேலிருந்து கீழாக, 700 மிமீ விட்ட அளவில், உட்குழிவாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குவது, 2.26 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 800 ப்ராச்சர். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் 4.2.2. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், 2.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியும் வளைவாக, 1,300 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணியை மேற்கொள்ள, இரண்டு விண்டோ இயக்கம், அசைய வைத்து ஸ்கிரீன் லாக் செய்தல், குயிக் தியேட்டர், ஆன்சர் மீ, கெஸ்ட் மோட், ஸ்லைட் அசைட் எனப் பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இதில் இணைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. பின்புறக் கவரில் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், உடனே அதனை நீக்க முடியும்.
இந்த போனின் பரிமாணம் 60.5 x 81.6 x 7.9 - 8.7 மிமீ. எடை 177 கிராம். இதன் கேமரா விநாடிக்கு 30 பிரேம்கள் இயக்கிக் கொள்ளும் திறன் கொண்டது. இதன் ராம் மெமரி LP DDR3 வகையைச் சேர்ந்தது. திறன் 2 ஜிபி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 32 ஜிபி. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் 4.0. , ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. என்.எப்.சி. வசதிகளும் தரப்பட்டுள்ளன.
இது சென்ற மாதம் கொரியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த மாதத்தில், சிங்கப்பூரிலும், ஹாங்காங் ஆகிய நகரங்களில் விற்பனையாகிறது. ஐரோப்பாவில் வரும் ஜனவரியில் கிடைக்கும். இந்தியாவில் அடுத்த பிப்ரவரியில் விற்பனையாகும்.

No comments:

Post a Comment