Translate

Thursday, 2 January 2014

10, 12, சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை வெளியீடு

10, 12, சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: சி.பி.எஸ்.இ 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வு அட்டவணைகளை சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்து உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என பெற்றோர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் கேட்டு வந்தனர்.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பதற்காகவே தேர்வு தொடங்கும் தேதி மட்டும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

12-வது வகுப்பு தேர்வு அட்டவணை:

01 -03-14 ஆங்கில விருப்பப் பாடம்

04-03-14 வரலாறு

06-03-14 வர்த்தக கல்வி

08-03-14 அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள்

10-03-14 நடனத்தேர்வு

11-03-14 வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள்

13-03-14 தமிழ், இந்தி விருப்பப்பாடம்

15-03-14 உயிரியல்

20-03-14 கணிதம், நுண் உயிரியல்

22-03-14 கம்ப்யூட்டர் சயின்ஸ்

24-03-14 உடல்கல்வி

26-03-14 பொருளாதாரம்

29-03-14 புவியியல்

1-04-14 அக்கவுண்டன்சி

03-04-14 சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்

10-04-14 சமூகவியல்

11-04-14 மனை அறிவியல்

12-04-14 தத்துவஇயல்

16-04-14 உளவியல்

17-04-14 ஓவியம்

10-வது வகுப்பு தேர்வு அட்டவணை:

1-03-14 தமிழ், ஹிந்தி, ஸ்பானிஷ், காஷ்மீரி உள்ளிட்ட மொழித்தேர்வுகள்

03-03-14 கணிதம்

04-03 -14 மனை அறிவியல்

07-03-14 இங்கிலீஷ் கம்யூனிகேசன்

10-03-14 அறிவியல்

12-03-14 மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட தேர்வுகள்

14-03-14 சமூக அறிவியல்

19-03-14 ஆட்டோமொபைல் டெக்னாலஜி
இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுகளை 13,25,627 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment