மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 264
மொபைல் போன் சந்தையில் அண்மையில் வெளியான, விலை குறைவான, வசதிகள் அதிகம் கொண்ட மொபைல் போனைத் தேடிய போது, நம் கண்ணில் பட்டது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 264. இதன் அதிக பட்ச விலை ரூ.1,449.
இதன் சிறப்புகளும் தரும் வசதிகளும்: இரண்டு பேண்ட் அலைவரிசையில் இரண்டு சிம்களுடன் இயங்கும் வகையில் உள்ளது. இதன் பரிமாணம் 118 x 49 x 14.3 மிமீ. பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் வண்ணத் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி., 0.3 எம்.பி.திறனுடன் டிஜிட்டல் ஸூம் கேமரா, எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர், கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், காலண்டர், அலாரம், டார்ச் லைட் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இதன் பேட்டரி 900 mAh திறன் கொண்டதாக உள்ளது.
No comments:
Post a Comment