நோக்கியா லூமியா 525 விலை ரூ. 10,399
சென்ற இதழ்களில் நோக்கியா நிறுவனத்தின் லூமியா 525 குறித்தும், அதன் தனிச் சிறப்புகள் குறித்தும் எழுதி இருந்தோம். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போன் ஜனவரி முதல் வாரம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.10,399.
இளஞ்சிகப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் விண்டோஸ் போன் 8 ஓ.எஸ். இயங்குவது இதன் தனிச்சிறப்பு. 1430 mAh திறன் கொண்ட பேட்டரியினை இது கொண்டுள்ளது. இதன் கேமரா (5 எம்.பி)வும் வீடியோ இயக்கமும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, நோக்கியாவின் லூமியா 1320 போனும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு சந்தையில் விற்பனையாகின்றன. இதன் விலை ரூ. 23,999. இதன் சிறப்புகள்:
6 அங்குல HD LCD IPS திரை டிஸ்பிளே கொண்டுள்ளது. இதற்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராசசர், 1,7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் அமைப்புடன் இயங்குகிறது. எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. இதுவே வேகமான விடியோ இயக்கத்தினையும் தருகிறது.இத்துடன் முன்புறமாக இயங்கும் விஜிஏ கேமரா ஒன்றும் உள்ளது. இதன் பரிமாணம் 164.25 x 85.9 x 9.79 மிமீ. எடை 220 கிராம். இதன் ராம் மெமரி 1 ஜிபி; ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்தலாம்.எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி/3ஜி, வை-பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ், என்.எப்.சி. ஆகியவை இயங்குகின்றன.
இதன் பேட்டரி 3400 mAh திறன் கொண்டது. ஜனவரி 13 முதல் இந்தியாவெங்கும் விற்பனையாகும் வகையில் இது அறிமுகம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment