மைக்ரோமேக்ஸின் போல்ட் A71 இன்று வெளியானது...!
தற்போது அதிக அளவில் மொபைல் சந்தைகளில் அனைவராலும் பேசப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் இன்று புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் A71 என்று பெயர் கொண்டு இன்று வெளிவந்துள்ள இந்த மொபைலில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போமா.
5 இன்ச் நீளத்துடன் வெளிவந்திருக்கும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.2 உடன் கிடைக்கின்றது மேலும் இதில் 1 GHz single-core ARM Cortex A5 பிராஸஸர் உள்ளது.
512MB க்கு மட்டுமே இன்பில்ட் மெமரி இருக்குங்க 32GB க்கு மெமரி கார்டு போட்டு கொள்ளலாம் இந்த மொபைலில்.
இதில் 3G, Wi-Fi 802.11 b/g/n and Bluetooth என மற்றவைகளில் இருக்கும் அனைத்து வசதிகளுமே இதில் உள்ளன.
மேலும், இதன் பேட்டரி 2000mAh திறன் கொண்டது இந்த மொபைல் விற்பனையில் என்ன செய்ய இருக்கினறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இதன் விலை ரூ.6,750 என மைக்ரோமேக்ஸ் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment