Translate

Monday, 27 January 2014

தொலைந்த பணப்பையை கண்டுபிடிக்கும் கையடக்கத் தொலைபேசி சாதனம்

தொலைந்த பணப்பையை கண்டுபிடிக்கும் கையடக்கத் தொலைபேசி சாதனம்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் பணப்பை தொலைத்துவிட்டு எரிச்சடைந்த சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கும். ஆனால் இனி பணப்பை தொலைந்துவிட்டால் தேடிய அலைந்து எரிச்சலடையத் தேவையில்லை.

இதற்காகவே தொலைந்த பணப்பையை இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் தொலைபேசி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மார் வொலெட்’ என அழைக்கப்படும் இச்சாதனம் ப்ளுடூத் மூலம் தொலைபேசியிலுள்ள எப்ஸுடன் இணைந்து செயற்படக்கூடியது.

இந்த ஸ்மார்ட் வொலிட்டினை உங்கள் பணப்பைக்குள் வைத்துவிட்டு உங்கள் தொலைபேசியில் அதற்கான எப்ஸினை நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் பணப்பை எங்கே உள்ளது என ஸ்மார்ட் வொலெட் காட்டித்தரும்.

ஸ்மாட் வொலிட் சாதனமுள்ள பணப்பைக்கும் தொலைபேசிக்கும் இடையிலான தூரம் 30 அடி தூரத்தினைத் தாண்டினால் உடனடியாக தொலைபேசிக்கு சத்தத்துடன் தகவல் வழங்கும். இதில் கடைசியாக பணப்பை எங்கே பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பணப்பை மட்டுமன்றி, திறப்பு, பெட்டி என தேவையான இடங்களிலும் ஸ்மார்ட் வொலிட்டினைப் பயன்படுத்தி பொருட்கள் தொலைவதையும் களவு போவதனையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

பயன்பாட்டுக்கு இலகுவாக ஸ்மார்ட் வொலிட் 4.2 மி.மீ. தடிப்பில் மீளவும் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் மின்கலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவைமிகு இச்சாதனத்தை சீனாவின் ஷங்காயைச் சோந்த ஜக் ஹு என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது ஸ்மார்ட் வொலெட்டின் எப்ஸ் ஐ போன், ஐபொட் மற்றும் 4.3 அன்ரொய்ட் பதிப்புகளுக்கும் ஒத்திசைகின்றது.

No comments:

Post a Comment