Translate

Saturday, 4 January 2014

சனி கிரகத்தை மிக நெருக்கமாக படம் பிடித்த நாசா

சனி கிரகத்தை மிக நெருக்கமாக படம் பிடித்த நாசா

பூமியை விட எட்டு மடங்கு பரப்பளவு கொண்ட சனி கிரகத்தை மிக நெருக்கமாக நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இந்தப் படங்களை நாசா ஏவிய கசினி விண்கலம் எடுத்ததாகவும் நாசா தெரிவித்தது.

2010 டிசம்பர் 5ம் திகதி அன்று எப்போதும் சீற்றத்துடன் ஒரு சூறாவளி காணப்பட்டதை கசினி கண்டுபிடித்தது. இது சனியின் வடக்கு திசையில் ஏறத்தாழ 35 டிகிரி அளவில் காணப்பட்டது.

விண்கலம் சனியைக் சுற்றிப் பார்த்ததில் கண்ட பெரிய சீற்றம் இதுதான். நாசா விஞ்ஞானிகள் 1990இல் இதே போன்றதொரு சீற்றத்தைப் படம் எடுத்திருந்தது.

2009, 2010 ஆண்டுகளில் இடைப்பட்ட மாதங்களில் கசினி விண்கலம் கண்ட மிகப்பெரிய சீற்றம் இதுதான். அதன் தீவிரத்தில், ஒரு வினாடி 10க்கும் மேற்பட்ட மின்னல்களை அந்த சீற்றம் வெளிப்படுத்தியது.

சனியின் பரப்பளவில் விண்கலம் நுழைந்ததில் இருந்து 10 சீற்றங்களை கசினி கண்டது.

”புயல் அலைகள்” என்றழைக்கப்பட்ட அந்தச் சீற்றங்கள், தென் துருவத்தில் இருந்த ஒரு பகுதி முழுவதும் பரவியது. சனி கிரகத்தை கசினி விண்கலம் இரண்டு துருவங்களாகக் காட்டியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பூமி மற்றும் வியாழன் கிரகங்களைப் போன்று அல்லாமல், சனி கிரகத்தில் தொடர்ந்து சீற்றங்கள் காணப்படும். பல நாட்கள் அவை அடங்கியிருந்து, திடீரென மேலெழும். பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கசினி விண்கலத்தை நாசாவும், ஐரோப்பிய விண்வெளி மையம், இத்தாலிய விண்வெளி மையமும் கூட்டாக இயக்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment