Translate

Thursday, 23 January 2014

இண்டெல் நிறுவனத்தின் புதிய ஹேஸ்வெல் எனும் சிப்பியூபற்றி

இண்டெல் நிறுவனத்தின் புதிய ஹேஸ்வெல் எனும் சிப்பியூபற்றி

இண்டெல் நிறுவனத்தாரால் ஒரு சிப்பிற்குள் உருவாக்கி மேம்படுத்தபட்ட மிகநுன்மையான கட்டமைவையே ஹேஸ்வெல் என அழைக்கபடுகின்றது. 2013 கோடைகாலத்தில் சிப்பியூ வானது இந்த ஹேஸ்வெல் என்ற கட்டமைவால் மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் குறைந்த மின்நுகர்வையே இந்த சிப்பியூ மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது இதனை தொடர்ந்து விண்டோ 8 இயக்கமுறைமை நிறுவபட்ட மடிக்கணினியின் மின்கலனானது சுமார் 18 மணிநேரம் வரை தொடர்ந்து மின்னேற்றம் செய்யாமலேயே இருப்பில் உள்ளமின்சாரத்தை பயன்படுத்தி மடிக்கணி நன்கு செயல்படும் திறனிற்கு உயர்ந்துள்ளது மேலும் இது மிகச்சிறந்த வரைகலை அனுபவத்தை வழங்கத்தயாராக இருக்கின்றது. அதனால் 4 கே அளவுள்ள ஒளிஒலி படங்களை எளிதாக இயக்கி கையாளும் திறன்வாய்ந்ததாக இது உள்ளது. கணினி இயங்கும்போது வெளியிடும் வெப்பஅளவும் மிக்குறைவான அளவேஉள்ளது இது முந்தைய ஐவிபிரிட்ஜைவிட மிகச்சிறந்ததாக விளங்குகின்றது

No comments:

Post a Comment