Translate

Sunday, 5 January 2014

அதிகாரி பணியிடங்கள்

அதிகாரி பணியிடங்கள்

கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெய்ல் நிறுவனம் இந்தியாவின் இயற்கை எரிவாயு தொடர்புடைய பிரமாண்டமான நிறுவனமாகும். இயற்கை எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தி செய்தல், பண்படுத்துதல், இடம்மாற்றுதல், வணிகம் செய்தல் என்ற பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கேட் (Gate) தேர்வு வாயிலாக எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மெக்கானிகலில் 18, எலக்ட்ரிகலில் 14, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 13, கெமிக்கலில் 20 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த 4 பொதுப்பிரிவுகளுக்கு இன்ஜினியரிங் சார்ந்த பல்வேறு இதர பிரிவுகளைச் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வயது : கெய்ல் நிறுவன எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.01.2014 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி : தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வு மதிப்பெண்ணும் தேவைப்படும். கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.01.2014
இணையதள முகவரி : https://gailebank.gail.co.in/Onlinerecruitment_et2/career.asp>

No comments:

Post a Comment