ஐ போன் 5C... விலை குறைந்தது...!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 4 மொபைல் போனின் விலை மலிவான விலையில் வழங்கி அசத்தியது.
இது ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது.
அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.
தற்போது ஐபோன் 5C மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, இணைய தளங்கள் தெரிவித்துள்ளன. இந்த போனின் அறிவிக்கப்பட்ட முதல் விலை 42 ஆயிரமாகும்
தற்போது இது ரூ.36,899க்குக் கிடைக்கிறது. இது ஏறத்தாழ ரூ.5,000 விலை குறைப்பாகும். அமேஸான் இந்தியா வர்த்தக இணைய தளத்தில், ஒவ்வொரு நிற ஐபோனுக்கும் போனுக்கும் ஒரு விலை அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட விலை நீல நிற போனுக்கானது. மஞ்சள் நிற போன் ரூ.37,149க்குக் கிடைக்கிறது. வெள்ளை நிறம் ரூ.39,250. ப்ளிப் கார்ட் இணைய தளத்தில், குறைந்த விலை ஐபோன் ரூ.38,100. ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.37,622 ஆக உள்ளது இது.
No comments:
Post a Comment