நோக்கியா லூமியா 625
லூமியா வரிசையில் அண்மையில் விற்பனைக்கு வந்துள்ளது நோக்கியா லூமியா 625. இந்த ஸ்மார்ட் போனில் விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்குகிறது. டூயல் கோர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ப்ராசசர் இயங்குகிறது. Qualcomm MSM8930 Snapdragon சிப்செட் தரப் பட்டுள்ளது. 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி இயக்கங்கள் கிடைக்கின்றன. ஒரே ஒரு மைக்ரோ ஜி.எஸ்.எம். சிம் மட்டுமே இதில் இயக்க முடியும். இதன் பரிமாணம் 133.3 x 72.3 x 9.2 மிமீ. எடை 159 கிராம். பார் டைப் வடிவில், 4.7 அங்குல அளவில் எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் திரை தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி உண்டு. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதியுடன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 512 ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, A2DP இணைந்த புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டு ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்டது. 30fps திறனுடன் வீடியோ இயக்கமும் கிடைக்கிறது. இரண்டாவதாக ஒரு விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளது.
அக்ஸிலரோ மீட்டர், காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி சென்சார் இயங்குகின்றன. SMS (threaded view), MMS, Email, Push Email, IM ஆகிய வசதிகள் கிடைக்கின்றன.டாகுமெண்ட் வியூவர் எடிட்டிங் வசதியுடன் உண்டு.இதன் லித்தியம் அயன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 24 மணி நேரம் பேசமுடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால், மின்சக்தி 552 மணி நேரம் தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 16,629.
No comments:
Post a Comment